கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கண்ணமங்கலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஏற்பாட்டாளர்களுடனான ஆலோசனை கூட்டம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் வரவேற்றார்.

கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பவர்கள் முறைப்படி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும், பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை யிடம் அனுமதி பெறவேண்டும், களிமண் சிலைகள் மட்டும் வைத்து வழிபாடு நடத்தி, உரிய பந்தல், ஒலி ஒளி பெருக்கி தொந்தரவு இல்லாமல், விழாக்குழுவினர் உரிய பாதுகாப்புடன் சிலைகளை 5 நாட்களுக்குள் அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உரிய போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் கண்ணமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம், இளநிலை பொறியாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story