விநாயகர் சதுர்த்தி 50 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படும்


விநாயகர் சதுர்த்தி 50 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படும்
x

விநாயகர் சதுர்த்தி 50 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

புதுக்கோட்டை

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆராய ஆதித்யா விண்கலமும் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுகளை செய்ய முடியாது. இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்த முறையை எதிர்க்கின்றனர். இது தவறானது. மத்திய அரசு உடனடியாக ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றதை கண்டித்து வருகிற 7-ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து ஒற்றுமை, சனாதன பாதுகாப்பு விழாவாக, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற பிரார்த்தனையாக நடைபெறும். அண்ணாமலையின் பாத யாத்திரை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலில் மாற்றத்தை இது ஏற்படுத்தும்'' என்றார். முன்னதாக புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார்.


Next Story