விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்


விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவினாசியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

அவினாசி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவினாசியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் விரதம் இருந்து பல விதமான விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி மூன்றாம் நாள் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதியில் உள்ள ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அவினாசி அருகே காசி கவுண்டன்புதூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

சிலைகள் தயாரிப்பு

இது குறித்து விநாயகர் சிலை தயாரிப்பாளர் ஆனந்தன் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம். களிமண், பேப்பர் கூல், கிழங்கு மாவு ஆகிய கலவைகளை கொண்டு 1 அடி முதல் 15 அடி உயரம் வரை ராஜசிம்ம விநாயகர், தர்பார் விநாயகர், கஜமுக விநாயகர், தாமரை விநாயகர் என பல தரப்பட்ட விநாயகர் சிலைகளை உருவாக்கி உலர்ந்த பின் அதில் பலவித வண்ணம் தீட்டி கலைநயத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படுகிறது.

15 தொழிலாளர்கள் இதில் வேலை பார்த்து வருகின்றனர். பலரும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இங்கிருந்து பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம், கொடுமுடி, கரூர், காங்கயம், கருமத்தம்பட்டி, ஊட்டி கூடலூர், குன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கவுந்தப் பாடி, கோபி, குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரம் சிலைகள் தயாரித்து அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story