விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. மறுநாள் மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜை மற்றும் பாவனா அபிஷேகம், திரவிய யாகம், பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும், எந்திர ஸ்தாபன அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று காலை நான்காம் கால பூஜையும், அதைத்தொடர்ந்து விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் சோமரசம்பேட்டை குணவதி துரைப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் சரக ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story