கோவில்பட்டியில் விதிமீறல்:2 ஆட்டோ, லாரி பறிமுதல்


கோவில்பட்டியில் விதிமீறல்:2 ஆட்டோ, லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விதிமீறல் காரணமாக 2 ஆட்டோ, லாரியை வட்டார போக்குவரத்து அதிகாரி பறிமுதல் செய்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் நேற்று வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது

தகுதிசான்று, காப்பு சான்று இல்லாமல், அனுமதிக்க பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை அவர் பறிமுதல் செய்தார். இந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி ஒன்று தகுதி சான்று, காப்புச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு ரூ,7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப் பட்டது.

1 More update

Next Story