பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பலகையில் கையெழுத்திட்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தரராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story