கடலூர் அருகே வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூர் அருகே வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் உள்ளேரிப்பட்டு ஊராட்சியில் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமை தாங்கி பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்கும் வகையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. மாணவர்கள் நன்றாக படிக்கும் திறன் இருந்து வாய்ப்பு இல்லை என்றால், அந்த வாய்ப்பு உருவாக்கி தரப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு சமூகத்தில் போதிய நடவடிக்கை எடுத்து அனைத்து துறைகளிலும் காவல்துறை மூலமாக பரிந்துரை செய்ய வழி வகைகள் உண்டு என்றார். தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, புள்ளியியல் துறை ஆய்வாளர் ரவிசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, பாலச்சந்தர், ஜோதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.