விரகாலூர் வெடி விபத்தால் பட்டாசு கடைகளில் ஆய்வு


விரகாலூர் வெடி விபத்தால் பட்டாசு கடைகளில் ஆய்வு
x

விரகாலூர் வெடி விபத்தால் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விரகாலூரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தனிபடைகள் அமைக்கபட்டு பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்து இருந்தார். அதன்படி ஜெயங்கொண்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையில் மின் ஒயர்கள் சரியில்லாததை அடுத்து அதனை சரிசெய்ய கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தபட்டது. மேலும் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் இதேபோன்று ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story