விருதுநகர் நகராட்சி அலுவலகம் முற்றுகை


விருதுநகர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
x

விருதுநகர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர்


விருதுநகரில் 24-வது வார்டு பெண்கள் தங்கள் பகுதியில் உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், நகரின் கிழக்கு பகுதியில் முழுமையாக 7 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் தங்கள் பகுதியில் 12 நாட்களுக்கு ஒரு முறை உப்புக்குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தை கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் முற்றுகையிட்டனர்.

இதேபோன்று 16-வது வார்டு மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை மற்றும் சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

1 More update

Next Story