விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
x

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 47 தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

விருதுநகர்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 47 தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

யூனியன் கூட்டம்

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 47 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யூனியன் கவுன்சிலர்கள் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற கலெக்டரை சந்தித்து வலியுறுத்த வேண்டுமெனக்கோரினர்.

தீர்மானங்கள் தொடர்பான ஆவணங்களையும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அங்கன்வாடி மைய கட்டிடம்

பெரிய பேராலி கிராமத்தில் யூனியன் தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவை சேதமடைந்துள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த ரூ. 2.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வலையப்பட்டி பஞ்சாயத்து மற்றும் கோட்டையூர் பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை புனரமைக்க ரூ. 1.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

யூனியன் பொது நிதியிலிருந்து ரோசல்பட்டி பஞ்சாயத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பணிக்கு பதிலாக நாகம்மாள் கோவில் தெருவில் வாருகால் கட்டுவதற்கு ரூ.5 லட்சமும், சத்திரரெட்டியபட்டி பஞ்சாயத்தில் விநாயகர் கோவில் அருகில் சிமெண்ட் தளக்கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பிற தீர்மானங்களும் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.


Next Story