விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
x

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவல்லி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர் ரவிச்சந்திரன் தனது வார்டில் அய்யனார் நகர் மற்றும் பராசக்தி நகர் பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கனிமவளத்துறை நிதி ஒதுக்கீட்டில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் கூரைக்குண்டு, மருதநத்தம், இனாம் ரெட்டியபட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் அல்லம்பட்டி, இனாம் ரெட்டியபட்டி, மருதநத்தம் ஆகிய கிராமங்களில் சேதமடைந்த மேல்நிலைகுடிநீர் தொட்டிகளை இடித்து அப்புறப்படுத்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவாதத்திற்கு பின் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story