விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு


விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
x

வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை,

விருதுநகர் அருகே தாயில் பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முருகேஸ்வரி, பானு ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரணம் அறிவித்துள்ளார். இருவர் குடும்பத்திற்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story