விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்-மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் புதுக்ேகாட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழுவில் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக சேர்க்க வேண்டும். நலிந்து வரும் வெள்ளிக்கொலுசு தயாரிப்பு, வெள்ளி விளக்குகள் செய்யும் தொழில், பித்தளை தொழில், பாத்திர தொழில் ஆகியவற்றை குடிசை தொழில்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் சந்திரன், நகர செயலாளர் ராசு, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.