கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்


கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் நடந்த கண்தான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தஞ்சை அரிமா சங்கங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு ஊர்வலத்தை தஞ்சையில் நேற்று நடத்தியது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக ராசா மிராசுதார் கண் ஆஸ்பத்திரி வரை சென்றடைந்தது. இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள், அரசு செவிலிய பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை ராசா மிராசுதார் அரசு கண் ஆஸ்பத்திரியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 37-வது கண்தான இருவார விழாவினை முன்னிட்டு மாணவிகள், டாக்டர்கள், செவிலியர்கள் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் ஞானசெல்வன மற்றும், அரிமா சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story