முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூருக்கு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூரில் தி.மு.க.செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

மார்ச் 1-ந் தேதி இளைஞர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் தி.மு.க. கொடி ஏற்றி இனிப்புகள் வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகை அசோகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story