திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வருகை பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வருகை  பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

29-ந் தேதி நடைபெறும் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் தி.மு.க.இளைஞரணி செயளலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனையொட்டி பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை

கலசபாக்கம்

29-ந் தேதி நடைபெறும் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் தி.மு.க.இளைஞரணி செயளலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனையொட்டி பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதயநிதி ஸ்டாலின்

கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டில் வருகிற 29-ம் தேதி திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடக்கிறது. மேலும் அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

பிரம்மாண்ட அரங்கம்

இதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடத்துவதற்காக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்துவருகிறது.

இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதால் கார் பார்கிங் வசதி, மோட்டார்சைக்கிள் நிறுத்துமிடம் மற்றும் உணவு சாப்பிட தனி அரங்கம் என அனைத்தும் தனித்தனியே அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பல்வேறு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி துணை தலைவர் கம்பன் உள்்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.



Next Story