தருமபுரம் ஆதீனத்தை சந்திப்பதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்


தருமபுரம் ஆதீனத்தை சந்திப்பதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீனத்தை சந்திப்பதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்: ஆதீன முதன்மை கண்காணிப்பாளர் அறிக்கை

மயிலாடுதுறை


தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளுக்கு பித்தப்பையில் ஏற்பட்ட கல் காரணமாக நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றப்பட்டது. தொடர்ந்து மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஆதீனம் மாலை மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் கட்டளை மடத்தில் நடந்த சொக்கநாதர் பூஜையில் கலந்து கொண்டார். தற்போது குருமகா சன்னிதானம் நலமுடன் உள்ளார் என்றும், பக்தர்கள், பார்வையாளர்கள் சன்னிதானத்திடம் ஆசி பெற வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தருமபுர ஆதீனம் சார்பில் ஆதீன முதன்மை கண்காணிப்பாளர் மணி அறிக்கை விடுத்துள்ளார்.


Next Story