கோவில்பட்டியில் விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி கூட்டம்
கோவில்பட்டியில் விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி கூட்டம்
கோவில்பட்டி (மேற்கு):
கோவில்பட்டி வ.உ.சி. நகரில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர். ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். நகர தலைவர் மாடசாமி வாழ்த்துரை வழங்கி பேசினார். கூட்டத்தில் தமிழகஅரசு கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை அமைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். நலிவடைந்த முடி திருத்தும் தொழிலாளர்ளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மருத்துவ தொழிலாளர் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகர மகளிர் அணி தலைவி பரமேஸ்வரி, மாவட்ட ஆலோசகர் மகேந்திரன், நகர பொருளாளர் மணி, நகர துணை செயலாளர் கருத்தபாண்டி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார், இளைஞர்அணி தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.