'விவேகானந்தர் மண்டபம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம்'பார்வையாளர் புத்தகத்தில் ராகுல்காந்தி கருத்து


விவேகானந்தர் மண்டபம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம்பார்வையாளர் புத்தகத்தில் ராகுல்காந்தி கருத்து
x

விவேகானந்தர் மண்டபம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் என அந்த மண்டபத்தை பார்வையிட்ட பிறகு ராகுல்காந்தி, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

விவேகானந்தர் மண்டபம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் என அந்த மண்டபத்தை பார்வையிட்ட பிறகு ராகுல்காந்தி, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

விவேகானந்தர் மண்டபத்தில் ராகுல்காந்தி

பாதயாத்திரையை தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தென்கோடி முனையை அலங்கரிக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.முடிவு செய்திருந்தார்.

அதன்படி கன்னியாகுமரிக்கு வந்ததும் முதலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு தனி படகில் நிர்வாகிகள் சிலருடன் சென்று அவர் பார்வையிட்டார். அங்கு விவேகானந்தர் சிலையுடன் இருக்கக்கூடிய மண்டபம், அம்மன் பாத மண்டபம், தியான மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ரசித்தார். மேலும் அங்கு விவேகானந்தர் பற்றி எழுதப்பட்டிருந்த குறிப்புகளையும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

பார்வையாளர் புத்தகத்தில் கருத்து

பொதுவாக விவேகானந்தர் மண்டபத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அதனை சுற்றி பார்த்ததும் அங்குள்ள சிறப்பம்சம் பற்றி தங்களுடைய கருத்துகளை பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பாக எழுதி வைப்பார்கள்.

அதன்படி ராகுல்காந்தி அந்த புத்தகத்தில் எழுதிய குறிப்பில், "ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் வந்து பார்க்க வேண்டிய இடம். ஆனால் நான் தாமதமாக வந்துள்ளேன்" என ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாக மண்டபத்தை நிர்வகிக்கும் கேந்திர நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

திருவள்ளுவர் சிலை

விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்த்த பிறகு ராகுல்காந்தி மற்றொரு பாறையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட்டார். தற்போது திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிக்காக சாரம் கட்டப்பட்டிருந்தது. அதுபற்றிய விவரத்தை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு கடற்கரைக்கு திரும்பியதும் அவர் காமராஜர் மணிமண்டபம், காந்தி நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செய்தார். அதன் பிறகு ராகுல்காந்தி வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story