விளாப்பாக்கம் டி.எல்.ஆர். கல்லூரியில் ரத்த தான முகாம்


விளாப்பாக்கம் டி.எல்.ஆர். கல்லூரியில் ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T01:04:35+05:30)
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் டி.எல்.ஆர். கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதனை சி.எம்.சி. மருத்துவமனை, திமிரி அரிமா சங்கம், கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்தியது.

கல்லூரி முதல்வர்கள் பி.நிர்மலா, டி.கவுதமன் ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி தலைவர் ஏ.எல்.ரவி, தாளாளர் பி.கோமதி ரவி ஆகியோர் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ- மாணவிகள் 150 பேர் ரத்த தானம் செய்தனர். இதில் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் விகாஷ், அரிமா சங்கத்தை சேர்ந்த டாக்டர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story