வ.உ.சி. பிறந்தநாள் ஓவியப்போட்டி


வ.உ.சி. பிறந்தநாள் ஓவியப்போட்டி
x

நெல்லையில் வ.உ.சி. பிறந்தநாள் ஓவியப்போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று மாணவ -மாணவிகளுக்கு கப்பலோட்டிய தமிழன் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். நீட் பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் அகிலாண்டம் முன்னிலை வகித்தார். இதில் 20-க்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 80 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர். அவர்களுக்கு வருகிற 17-ந் தேதி அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.


Next Story