கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்ரூ.34.65 கோடியில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையம்காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்ரூ.34.65 கோடியில், தொழில்  4.0 தொழில்நுட்ப மையம்காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 July 2023 7:30 PM GMT (Updated: 13 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாநிலம் முழுவதும் 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.1,559 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்படி தர்மபுரி மாவட்டம், கடகத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி புதிதாக திறந்து வைக்கப்பட்ட தொழில் நுட்ப மையத்தை பார்வையிட்டார்.

புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்திற்கு ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டிடமும், சுமார் ரூ.31 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தொழில்நுட்ப எந்திரங்கள் மற்றும் தளவாடங்களும் நிறுவப்பட்டுள்ளன. மேலும் பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் வகையில் 40 வகையான ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் எந்திரங்கள், 20 வகையான தொழில்நுட்ப எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்ப உபகரணங்களை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவகுமார், கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார் உள்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story