மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது
சிவகங்கை
சிவகங்க
சிவகங்கையில் தாய் அறக்கட்டளை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி இயக்குனர் சிம்மை ஆட்சி தலைமை தாங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் அன்பு துரை, எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தாய் இல்லத்தின் ஆலோசகர் ராமச்சந்திரன், பொருளாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொழில் பயிற்சியை இயக்குனர் தொடங்கி வைத்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story