கைப்பந்து போட்டி


கைப்பந்து போட்டி
x

எஸ்.பி.பட்டினத்தில் த.மு.மு.க. சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி த.மு.மு.க. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மின்னொளி கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. ேபாட்டியை திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது, 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது, மற்றும் டாக்டர் முஹம்மது ரில்வானுக்கு மருத்துவர் விருது வழங்கப்பட்டது. விழாவில் த.மு.மு.க. மாநில செயலர் தொண்டி சாதிக்பாட்சா, மாவட்ட செயலாளர்கள் நசீர், வக்கீல் ஜிப்ரி த.மு.மு.க. கிளை தலைவர் பஷீர் அலி, ம.ம.க. மாவட்ட செயலாளர் நிஷார், கிளை செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, மற்றும் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story