'தொண்டர்கள்' - ஓ.பன்னீர்செல்வத்தின் ஒற்றைச் சொல் டுவிட்டர் பதிவு


தொண்டர்கள் - ஓ.பன்னீர்செல்வத்தின் ஒற்றைச் சொல் டுவிட்டர் பதிவு
x

ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'தொண்டர்கள்' என்று ஒற்றைச் சொல்லில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

அமெரிக்காவின் 'அம்ட்ராக்' என்ற ரெயில் சேவை நிறுவனம் 'trains' என ஒற்றை வார்த்தையில் டுவீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றைச் சொல்லில் டுவீட் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'democracy' (ஜனநாயகம்) எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' எனவும் பதிவிட்டுள்ளனர். அதுபோல நாசா, 'universe' (பிரபஞ்சம்) என பதிவிட்டுள்ளது. இதுபோல தமிழக அரசியல் தலைவர்களும் இந்த டுவிட்டர் டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திராவிடம்' எனப் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' எனவும்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'தமிழன்' எனவும்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'சமூகநீதி' எனவும்

சசிகலா, 'ஒற்றுமை' எனவும்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 'அம்மா' எனவும்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழ்த் தேசியம்' எனவும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் 'மக்கள்' எனவும்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 'வறுமை ஒழிப்பு' எனவும் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒற்றைச் சொல் டுவிட்டர் பதிவில் இணைந்துள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'தொண்டர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.



Next Story