முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும்-தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும்-தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு
x

கலைஞர் நூலக திறப்பு விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும் என தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு விடுத்து உள்ளார்.

மதுரை

திருமங்கலம்

கலைஞர் நூலக திறப்பு விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும் என தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசியதாவது:-

மதுரையில் நாளை(15-ந்தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத்தை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும் அந்தளவிற்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முதல்-அமைச்சருக்கு புத்தகங்களை தரவேண்டும். நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்-அமைச்சர் வரவேற்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தெரிவித்து தீர்மானம்

இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணைசெயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story