நொய்யல் ஆற்றில் 200 வகை மலர் தூவிய தன்னார்வலர்கள்


நொய்யல் ஆற்றில் 200 வகை மலர் தூவிய தன்னார்வலர்கள்
x

பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றுக்கு நன்றி கூறும் வகையில் தன்னார்வலர்கள் மலர் தூவினர்.

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றுக்கு நன்றி கூறும் வகையில் தன்னார்வலர்கள் மலர் தூவினர்.

நொய்யல் ஆறு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஓடைகளில் உருவெடுக்கும் நீர் ஆகியவை ஒன்று சேர்ந்து மத்வராயபுரம் கூடுதுறையில் சங்கமித்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது.

கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆறு, கோவையில் தொடங்கி திருப்பூர் வழியாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

மேலும் நொய்யல் ஆறு மூலம் கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மொத்தம் 25 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படும். இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் உயரவும், பாசனத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மலர் தூவினர்

இந்நிலையில், கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் நடந்தது.

இதில், அனிச்சம், ஆம்பல், வெட்சி, கரந்தை. நொச்சி, வாகை, தும்பை, துளசி, தென்னம்பூ, வாழைப்பூ, கோரை, செம்மணி, ஊமத்தை, பூவரசு உள்ளிட்ட 200 வகையான மலர்களை தட்டுகளில் அடுக்கி வைத்து மங்கள வாத்தியங்கள் இசைக்க செந்தமிழில் வாழ்த்து பாடி நன்றி கூறினர்.

இதில், தன்னார்வலர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, நொய்யல் அன்னையை மலர்தூவி வணங்கி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு செய்திருந்தது.


Next Story