திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை


திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என சுமார் 50 பேருக்கு திடீரென வாந்தி, பேதியுடன் மயக்கம் ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் வாந்தி, பேதியால் மயங்கிய அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 50 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிவதுடன், மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story