வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்வு


வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்வு
x

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.

வாக்குச்சாவடி பட்டியல்

திருப்பூர் மாவட்ட வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பட்டியலை இறுதிப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

ஏற்கனவே தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294, மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்து புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள், பல்லடத்தில் 2 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள், பல்லடத்தில் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 513 வாக்குச்சாவடிகளாக இருந்தது தற்போது 7 வாக்குச்சாவடிகள் உயர்ந்து, 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகளாக அதிகரித்துள்ளது.

இதுபோல் 37 வாக்குச்சாவடிகளின் கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது. 29 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குச்சாவடிகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இறுதி செய்யப்படும்

இந்த பட்டியல் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு இறுதி செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story