வாக்காளர் அடையாள அட்டை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திருப்பத்தூரில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
வாக்காளர் விழிப்புணர்வு அட்டை பொதுமக்கள் பெறுவது குறித்து கலை நிகழ்ச்சிகள் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கலைநிகழ்ச்சியின் மூலம் படிவம் 6-ல் வாக்காளர் பெயரை பதிவு செய்தல் படிவம் 6-பி மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்ப்பது படிவம் 7-ன் மூலம் வாக்காளர் பெயரை நீக்குதல் படிவம் 8-ன் மூலம் வாக்காளர் விவரங்களை திருத்துதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம் என்று மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் நாடக வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 18 வயது தொடங்கும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள். கலந்து கொண்டனர்