மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 May 2023 10:12 PM IST (Updated: 2 May 2023 10:15 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.

திட்டமிடும் குழு உறுப்பினர்

தமிழ்நாடு உள்ளாட்சிகள் அமைப்புகள் விதிகள் 1999-ன்படி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உறுப்பினர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சிகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வாக்காளர்களின் பொதுவான தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

210 உறுப்பினர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சியின் 18 உறுப்பினர்களும், தர்மபுரி நகராட்சியின் 33 உறுப்பினர்களும், அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பி.மல்லாபுரம் ஆகிய 10 பேரூராட்சிகளின் 159 உறுப்பினர்களும் என மொத்தம் 210 உறுப்பினர்களை உள்ளிடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் அலுவலர் ஆதிமூலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, அலுவலக மேலாளர் தண்டபாணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story