வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு பேரணி
வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையுமாறு தெரிவித்தார்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கி அரியலூர் உழவர் சந்தை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.