சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 63 வாக்காளர்கள்


சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 63 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 63 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 63 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் அடங்கியுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியீட அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

நேற்று வெளியிடப்பட்ட இந்த வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,74,486 பேர், பெண் வாக்காளர்கள், 5,94,525 பேர், இதரர்கள் 52 பேர் என மொத்தம் 11,69,063 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்களை விட பெண்கள் 20 ஆயிரத்து 39 பேர் அதிகம் உள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

சட்டசபை தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

காைரக்குடி - ஆண்கள் 1,52,382, பெண்கள் 1,57,440, இதரர் 45 - மொத்தம் 3,09,867. திருப்பத்தூர் - ஆண்கள் 1,42,158, பெண்கள், 1,47,931, இதரர் 2 - மொத்தம் 2,90,091. சிவகங்கை - ஆண்கள் 1,44,307, பெண்கள் 1,49,311, இதரர்கள் 4- மொத்தம் 2,93,622. மானாமதுரை (தனி) - ஆண்கள் 1,35,639, பெண்கள், 1,39,843, இதரர் 1 - மொத்தம் 2,75,483.

இதேபோல் காரைக்குடி தொகுதியில் 198 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூர் தொகுதியில் 193 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 229 வாக்குச்சாவடிகளும், மானாமதுரை தனி தொகுதியில் 236 வாக்குச்சாவடிகளும், உள்ளன. இந்த நிகழ்ச்சியி்ல் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story