11 லட்சத்து 76 ஆயிரத்து 271 வாக்காளர்கள்


11 லட்சத்து 76 ஆயிரத்து 271 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 11 லட்சத்து 76 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 11 லட்சத்து 76 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

11,76,271 வாக்காளர்கள்

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழா அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அதை அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியளின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்துார், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 743 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 98 ஆயிரத்து 473 பெண் வாக்காளர்களும் 3-ம் பாலினத்தவர்கள் 55 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 76 ஆயிரத்து 271 பேர் உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

1354 வாக்குச்சாவடிகள்

காரைக்குடி:- ஆண் வாக்காளர்கள் 1,53,228, பெண் வாக்காளர்கள் 1,58,417, 3-ம் பாலினத்தவர்கள் 45, மொத்தம் 3,11,690. திருப்பத்தூர்:- ஆண் வாக்காளர்கள் 1,43,106, பெண் வாக்காளர்கள் 1,49,101, 3-ம் பாலினத்தவர்கள் 3, மொத்தம் 2,92,210. சிவகங்கை:- ஆண் வாக்காளர்கள் 1,45,005, பெண் வாக்காளர்கள் 1,50,170, 3-ம் பாலினத்தவர்கள் 6, மொத்தம் 2,95,181. மானாமதுரை:- ஆண் வாக்காளர்கள் 1,36,404, பெண் வாக்காளர்கள் 1,40,785, 3-ம் பாலினத்தவர் 1, மொத்தம் 2,77,190.

அதேபோல் காரைக்குடி தொகுதியில் 346 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூர் தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச்சாவடிகளும், மானாமதுரை(தனி) தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியாளர்கள் சுகிதா, பால்துரை, தனி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகரசபை தலைவர் துரை ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், அ.தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், நகர் செயலாளர் ராஜா, பா.ஜ.க. சார்பில் மாவட்டதுணை தலைவர் சுகவனேஸ்வரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, தே.மு.தி.க. சார்பில் நகர் செயலாளர் தர்மராஜ், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் நகர் மன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story