மாவட்டத்தில்11,56,882 வாக்காளர்கள்


மாவட்டத்தில்11,56,882 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:45 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,56,882 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களை விடபெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

ராமநாதபுரம்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,56,882 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களை விடபெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 5,75,546 ஆண் வாக்காளர்களும், 5,81,268 பெண் வாக்காளர்களும், 68 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 11,56,882 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

சரிபார்க்கலாம்

1371 பாகங்கள் அடங்கிய இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அலுவலர், உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை பொதுமக்கள் அனைவரும் சரிபார்த்து கொள்ளலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், தேர்தல் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story