அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி


அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது  மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி
x

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

நாமக்கல்


நாமக்கல்லில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல், மவுனமாக இருக்கிறார்‌. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ேநஷனல் ஹெரால்டு வழக்கில் தங்களை கோர்ட்டில் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கு பதிலாக கட்சியினரை தூண்டிவிட்டு ஆங்காங்கே போராட்டம் நடத்துவது சட்டம் மற்றும் நீதித்துறையை அவர்கள் மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பொதுமக்கள் பிரச்சினையாக கருத வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் பிரச்சினையை வேறு விதமாக தூண்டுகிறார். இது தவறான முன் உதாரணமாகும். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் ஒற்றை தலைமை பிரச்சினையானது, முழுக்க முழுக்க அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். அதில் பா.ஜ.க. ஒருபோதும் தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட பொது செயலாளர்கள் சத்தியபானு, வடிவேல், துணைத்தலைவர்கள் மகேஸ்வரன், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story