வி.எஸ். மழலையர்-தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


வி.எஸ். மழலையர்-தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
x

வி.எஸ். மழலையர்-தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருவாரூர்

திருவாரூரை அடுத்த பவித்திரமாணிக்கத்தில் உள்ள வி.எஸ். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஸ்ரீதேவி தியாகராஜன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் ஜி.வரதராஜன், பா.ம.க. திருவையாறு ஒன்றிய செயலாளர் ஆர்.கர்ணன், மாவட்ட மைய நூலக அலுவலர் முருகானந்தம், பி.எஸ்.என்.எல். இளநிலை பொறியாளர் சக்திவேல் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். முன்னதாக மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story