வ.உ.சி. பிறந்தநாள் விழா


வ.உ.சி. பிறந்தநாள் விழா
x

சிவகாசியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி திருத்தங்கலில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். அப்போது சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர்கள் விவேகன்ராஜ், தங்கராஜ், பகுதி செயலாளர் காளிராஜன், மாநகராட்சி கவுன்சிலர் வெயில்ராஜ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், வர்த்தக அணி இன்பம், எம்.ஏ.சந்திரன், அதிவீரன்பட்டி செல்வம், திருத்தங்கல் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசோகன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். இதேபோல் அ.தி.மு.க. ஈ.பி.எஸ்.பிரிவு சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல். ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், அ.தி.மு.க. நிர்வாகிகள் கருப்பசாமி, விஸ்வநத்தம் ஆரோக்கியம், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் தெய்வம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.



Next Story