வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, வட்டார காங்கிரஸ் செயலாளர் உலகநாதன், நகர ஓ.பி.சி தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இலக்கிய பிரிவு தலைவர் அசோக் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரும், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சங்கை கணேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். சிவகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர் கலா, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாட்டாமை மாணிக்கம், வேலுச்சாமி, ராமர், ராசு என்ற குருசாமி, ராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மனோ பாலாஜி நன்றி கூறினார்.

1 More update

Next Story