வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார்


வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று நடைபெறுகிறது. இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று நடைபெறுகிறது. இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை வழங்குவதுடன், சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவிக்கிறார்.

பலத்த பாதுகாப்பு

அத்துடன் அவர், கோவை மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கிறார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்காக கோவையில் உள்ள வ.உ.சி. மைதானம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்்த நிலையில் விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து அங்கு போலீசார் மோப்பநாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் பொதுமக்கள் யாரையும் வ.உ.சி. மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இந்த மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், அவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story