வியாசா கல்லூரி ஆண்டு விழா

வாசுதேவநல்லூர் வியாசா கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரை அடுத்த சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 6-வது ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கி பேசினார். கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய் முன்னிலை வகித்தார். உதவி சேர்மன் பிரகாசவல்லி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் கல்லூரி மாணவியர் தலைவி சிரின் பர்ஹானா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






