வைகோ பிறந்த நாள் விழா


வைகோ பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வைகோ பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோவின் 79-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பிரையன்ட் நகரில் உள்ள செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தர்ராஜ், பொன்ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story