65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்


65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:48 PM GMT)

வைகை அணை நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த ஆண்டில் வைகை அணை 2 முறை அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால், வைகை அணை நீர்மட்டம் கடந்த 3 மாதங்களாக குறையாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருமாதம் ஆகியும் தேனி மாவட்டத்தில் சரியாக மழை பெய்யவில்லை. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைவான அளவே மழை பெய்தது. மேலும் பருவமழை பெய்ய வேண்டிய நேரத்தில் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும், அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 65.35 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,076 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,719 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


Related Tags :
Next Story