ெரயில்வே சுமை பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்


ெரயில்வே சுமை பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
x

ெரயில்வே சுமை பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி பொன்மலை ெரயில்வே தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை பிரிவில் சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ெரயில்வே சார்ந்த பொருட்களை லாரியில் இருந்து இறக்குவதற்கு ஒப்பந்ததாரர் குறைந்த அளவில் சம்பளம் கொடுப்பதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்தால் மிரட்டுகிறார் என்றும், எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமைபணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட சுமை பணி செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.இது தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதேபோல் தென்னக ெரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த மாணவ-மாணவிகள் பணி வழங்க வலியுறுத்தி பொன்மலை ெரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 More update

Next Story