வாலாஜா பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும்

வாலாஜா பஸ் நிலையத்தை நவீன முறையில் சீமைக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்ானம் நிறைவேற்றப்பட்டது.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நிர்மலா ராகவன், ஆணையாளர் சரவணன் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில் வாலாஜா நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது. அதில் மதிப்பீடு விகிதத்தை நகரமன்ற கூட்டத்தில் வைக்க வேண்டும். சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். நகரம் முழுவதும் ஒட்டுமொத்த தூய்மைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வைக்க வேண்டும். குடிநீர் வினியோகிப்பதற்காக பயன்படுத்தும் மின் மோட்டார்களில் பழுதடைந்துள்ளவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் சோளிங்கர் ரோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சர்க்கார் தோப்பு பகுதியில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவது. தற்போது உள்ள பஸ் நிலையத்தை புதிதாக வடிவமைத்து நவீன முறையில் சீரமைப்பது, ரூ.30 லட்சம் செலவில் 5 பள்ளிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, கழிவறை வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






