நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைப்பு


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைப்பு
x

சந்திர கிரகணத்தையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைக்கப்பட்டது.

நாமக்கல்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நடைபெறும்போது கோவில்களில் நடை அடைப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்தியாவில் சந்திர கிரகணம் ஏற்படும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பிற்பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதனால் அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்து சென்றனர். மாலை 6.30 மணிக்கு கிரகணம் முடிந்த பிறகு, திருமஞ்சனம் செய்து, பரிகார பூஜை செய்யப்பட்டு, நடை திறக்கப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் நரசிம்மசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சந்திர கிரகணத்தை யொட்டி நேற்று மாலை நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story