'பில்லர் ராக்' முன்பு கட்டப்பட்ட பெருஞ்சுவர் - பொதுமக்கள் எதிர்ப்பால் இடிப்பு


பில்லர் ராக் முன்பு கட்டப்பட்ட பெருஞ்சுவர் - பொதுமக்கள் எதிர்ப்பால் இடிப்பு
x

பில்லர் ராக் முகப்பு பகுதியில் வனத்துறையினர் 22 அடி உயர சுவரை எழுப்பியிருந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான 'பில்லர் ராக்' (தூண் பாறை) வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பில்லர் ராக் முகப்பு பகுதியில் வனத்துறையினர் 22 அடி உயர சுவரை எழுப்பினர்.

இதற்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சுவர் கட்டப்பட்டால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த சுவரை இடித்து வருகின்றனர்.


Next Story