மன்னார்குடிக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?
வடபாதிமங்கலத்தில் இருந்து மூலங்குடி வழியாக மன்னார்குடிக்கு அரசு பஸ் இயக்கப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
வடபாதிமங்கலத்தில் இருந்து மூலங்குடி வழியாக மன்னார்குடிக்கு அரசு பஸ் இயக்கப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பஸ்கள் இல்லை
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து, மூலங்குடி செல்லும் வழித்தடத்தில், ஓகைப்பேரையூர், புனவாசல், நாகராஜன்கோட்டகம், வடபாதி, வேளுக்குடி, கோம்பூர் மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் மன்னார்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் காலையில் பள்ளி செல்வதற்கும், அதேபோல் மாலையில் வீடு திரும்புவதற்கும் குறித்த நேரத்தில் பஸ்கள் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் அவதி
இதனால் தூரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் பஸ்களில் மாணவர்கள் நின்று கொண்டே செல்வதால் மிகவும் சோர்வடைகிறார்கள். எனவே வடபாதிமங்கலத்தில் இருந்து, மூலங்குடி வழியாக மன்னார்குடிக்கு சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.