வார்டு சபை கூட்டம்
சோளிங்கரில் வார்டு சபை கூட்டம் நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு எசையனூர் பகுதிகளில் வார்டு சபை கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.
அப்போது அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது பொதுமக்கள் மகளிருக்கான சுகாதார வளாகம், அனைத்து தெருக்களுக்கும் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி, மின்விளக்கு, நந்தி ஆற்றின் குறுக்கே உள்ள நூற்றாண்டு பழமையான தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர வேண்டும், பொன்னை குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி கவுன்சிலர் கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.