வார்டு சபை கூட்டம்


வார்டு சபை கூட்டம்
x

பனப்பாக்கம் பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

அப்போது வார்டில் புதிய தெருவிளக்கு அமைப்பது குறித்தும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வார்டில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சீனிவாசன், தேன்மொழி பார்த்தசாரதி, சாரதி உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story